சீனாவில் முடிவுக்கு வந்தது ஊரடங்கு உத்தரவு: இயல்பு வாழ்க்கை தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி

இயல்பு வாழ்க்கை தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி

சீனாவில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருந்த நிலையில் 76 நாட்களுக்குப் பின்னர் தற்போது சீனாவின் வூகான் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது

இதனையடுத்து வூகான் மாகாணத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் தவிர மற்ற அனைத்தும் திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவிலான வைரஸ் பரவல் தொடங்கியபின் சீனாவின் வூகான் மாகாணத்தில் மட்டும் 76 நாட்களுக்கு பின் தற்போது தான் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்ததை அடுத்து சீன அரசு இந்த ஊரடங்கு உத்தரவை தளத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 டிசம்பர் 1ம் தேதி சீனாவில் முதல் நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 76 நாட்களுக்கு பிறகு சீனாவில் வூகான் நகரத்தின் லாக் டவுன் முடிவிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.