உள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு: அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பு

உள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு: அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் இது குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அளித்த தீர்ப்பில் மறு வரையறை செய்யப்படாத ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்தலாம் என்று அறிவித்துள்ளது

இதனை அடுத்து உள்ளாட்சி தேர்தல் தேதி மாற்றப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்திருந்த தேர்தல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெறப்பட்டது என்றும் தேர்தல் ஆணைய செயலாளர் சுப்ரமணியன் சட்டப்பூர்வ ஆணை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply