ஊரக உள்ளாட்சி க்கு மட்டும் தேர்தல்: நகராட்சி மாநகராட்சி என்ன ஆச்சு?

ஊரக உள்ளாட்சி அமைப்பிற்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது

உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, டிசம்பர் 30 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் என்றும் டிசம்பர் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல், டிசம்பர் 13ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள், டிசம்பர் 16ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை மற்றும் டிசம்பர் 18-ம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறப்படும் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய இரண்டு நாட்கள் தேர்தல் நடைபெறும் என்றும், ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே இந்த இரண்டு கட்ட தேர்தல் நடைபெறும் என்றும், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி தேர்தல் எப்போது என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரு அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply