வேட்டைக்காரரை வேட்டையாடிய சிங்கங்கள்: தென்னாப்பிரிக்க பூங்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வேட்டைக்காரரை வேட்டையாடிய சிங்கங்கள்: தென்னாப்பிரிக்க பூங்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள லிம்போயோ மாகாணத்தில் ஹோயட்ஸ் புருயிட் என்ற பகுதியில் உள்ள குரூஜெர் என்ற தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான சிங்கங்கள் உள்ளன. இந்த சிங்கங்களை சிலர் சட்ட விரோதமாக வேட்டையாடி வருவதாக குற்றச்சாட்டு உண்டு

இந்த நிலையில் இந்த பூங்காவிற்கு சென்றா ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலின் பெரும்பகுதியை ஏதோ ஒரு விலங்கு தின்ற பின் தலை உள்ளிட்ட சில பாகங்கள் மட்டும் அங்கு இருந்ததால் அவரை சிங்கங்கள்தான் கடித்து குதறியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

மேலும் அந்த நபரின் உடல் அருகே வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் வெடி பொருட்கள் இருந்ததால் அவர் வேட்டைக்காரராக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிங்கங்களை அவர் வேட்டையாட முயற்சித்தபோது சிங்கங்கள் அவரை அடித்து கொன்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.