shadow

lingaa trailerசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா, ஏ.ஆர்.ரஹ்மான், கே.எஸ்.ரவிகுமார் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை யுடியூப் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப ஈராஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. அதற்கான விளம்பரமும் நேற்று முதல் டுவிட்டரில் வெளிவந்தது. ஆனால் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் தொலைக்காட்சி உரிமையை பெற்றிருந்த ஜெயா டிவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் யூடியூப் நேரடி ஒளிபரப்பு கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக  தற்போது கோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் யூடியூப் இணையதளத்தில் நேரடியாக லிங்கா ஆடியோ வெளியீட்டு விழாவையும், ரஜினியின் பேச்சையும் கேட்டு ரசிக்கலாம் என்று ஆசையாய் காத்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்

Leave a Reply