shadow

சென்னையை போல் மியான்மரிலும் ஒரு வள்ளுவர் கோட்டம்

திருக்குறள் என்னும் உலகப்பொதுமறையை எழுதிய திருவள்ளுவர் நினைவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதி திருவாரூர் தேர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகள் போன்று பல்வேறு விழாக்கள் நடத்துவதற்கு ஏதுவாக அரங்கங்கள் அமைக்கப்பட்டு திருக்குறள்கள் பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த வள்ளுவர் கோட்டம் போல் மியான்மர் நாட்டில் மான் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து திருவள்ளுவர் நினைவாக சென்னையில் இருப்பது போல் மான் நகரில் வள்ளுவர் கோட்டம் அமைக்க முடிவு செய்தனர்.

தமிழ் கலாச்சாரத்தை எடுத்துக் கூறும் வகையில் அழகிய வேலைபாடுகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நிலையில் பல்வேறு காரணங்களால் முடிவடையாமல் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது.

வருகிற மே மாதம் 1-ந்தேதி இதன் திறப்பு விழா நடக்கிறது. இதுபற்றி மியான்மர் வள்ளுவர் கோட்டம் தொடக்க விழா குழு செயலாளர் எஸ்.பார்த்திபன் கூறுகையில் இந்த வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டுள்ள இடம் தலைநகர் யங்கூனில் இருந்து 200 கி.மீ தொலைவில் 9,600 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 1990-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. வருகிற 1-ந்தேதி திறப்பு விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு இந்தியா, சிங்கப்பூர், மலேசியா நாட்டு தலைவர்ளுக்கு அழைப்பு விடுப்போம் என்றார்.

Leave a Reply