சிங்கப்பூரை அடுத்து சென்னையில் லைட் ரயில் சேவை: விரைவில் தொடக்கம்

சிங்கப்பூரை அடுத்து சென்னையில் லைட் ரயில் சேவை: விரைவில் தொடக்கம்

சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என இரண்டு ரயில் சேவைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் மூன்றாவதாக இலகு ரயில் சேவை விரைவில் தொடங்கவிருப்பதாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ ரயில், சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் ஒருசில வழித்தடங்களில் மட்டுமே இந்த சேவை உள்ளது

இதனையடுத்து சென்னை முழுவதும் இலகு ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கான மதிப்பு, ஆகும் செலவு உள்ளிட்ட விபரங்கள் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலகு ரயில் சேவை, முதற்கட்டமாக தாம்பரம் – வேளச்சேரி வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது.

ஏற்கனவே இந்த லைட் ரயில் சர்வீஸ் சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவின் சிட்னி, கனடாவின் ஒட்டாவா, மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.