shadow

டிரம்புக்கு எதிராக களமிறங்கும் கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் நிறுவனங்கள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக சிரியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து அவர் போட்ட உத்தரவால் உலகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

டிரெம்பின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் உள்பட பல முன்னணி தொழிலதிபர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இவர்களில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தற்போது இணைந்துள்ளார்.

மேலும் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒன்றிணைந்து  ட்ரம்ப் விதித்த தடைக்கு எதிராக சட்ட ஆவணம் ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். ஆப்பிள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், பேஸ்புக், ட்விட்டர் , கூகுள் உள்பட அமெரிக்காவின் 97 முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்கள் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனினும் அமேசான், டெஸ்லா உள்பட ஒருசில முன்னனி நிறுவனங்கள் இதில் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply