shadow

எம்ஜிஆருக்கும், ரஜினிக்கும் உள்ள ஒரே குணம்: லதா

மக்கள் திலகம் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த நடிகை லதா, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார். இருப்பினு ரஜினியும் லதாவும் பல ஆண்டுகளாக நட்பில் உள்ளனர்.

இந்த நிலையில் அதிமுகவில் இருக்கும் நடிகை லதா, ரஜினியின் அரசியல் வருகை குறித்து கூறியபோது, ‘எம்.ஜி.ஆரோடு யாரையும் ஒப்பிட முடியாது. ஒவ்வொருவருக்கும் குணம், தனித்தன்மைகள் உண்டு. ரஜினி பழகுவதற்கு எளிமையானவர். நல்ல மனிதர். எம்.ஜி.ஆர். மனித நேயம் மிக்கவர். பிறருக்கு உதவும் குணம் உள்ளவர். ரஜினிக்கும் அதே குணம் உண்டு.

எம்.ஜி.ஆருக்கு எப்போதும் தலைக்கனம் இருந்தது இல்லை. இப்போது இரண்டு படங்களில் நடித்துவிட்டாலே அவர்களை பிடிக்க முடிவதில்லை. ஆனால், ரஜினிகாந்த் இவ்வளவு புகழடைந்தபோதும் மிகவும் எளிமையான மனிதர்.

எனது மகன் தயாரிக்கும் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் டீசரை வெளியிட வேண்டும் என்று ரஜினியிடம் கேட்டேன். உடனே ஒப்புக் கொண்டு தனது வீட்டுக்கு அழைத்து டீசரை வெளியிட்டார். சமீபத்தில் எனது வீட்டுக்கு வந்தவர், என் வீட்டின் பணியாளர்களுடன் கூட புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். அந்த அளவுக்கு எளிமையானவர்.

Leave a Reply