ரூ15 லட்சம் வழங்கிய எம்ஜிஆர் சிவாஜி பட நாயகி

ரூ15 லட்சம் வழங்கிய எம்ஜிஆர் சிவாஜி பட நாயகி

தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியாக ரூபாய் 15 லட்சம் எம்ஜிஆர் சிவாஜி பட நாயகி வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு இரவு பகலாக போராடி வரும் நிலையில் தமிழக அரசு நல்ல உள்ளம் படைத்த தொழிலதிபர்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர்

இந்த நிலையில் திரைத்துறையில் இருந்து சிவகார்த்திகேயன் மட்டுமே ரூபாய் 15 லட்ச ரூபாய் கொடுத்திருக்கும் நிலையில் தற்போது நடிகை லதா ரூபாய் 15 லட்ச ரூபாய் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்

எம்ஜிஆர் சிவாஜி உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த இவர் நேற்று தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்களை நேரில் சந்தித்து 15 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply