பெர்த் வாகா மைதானத்தில் இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் 3வது டெஸ்டில், ஆஸி. வீரர் ஜார்ஜ் பெய்லி ஒரே ஓவரில் 28 ரன் விளாசி வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் பிரையன் லாராவின் சாதனையை சமன் செய்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 87வது ஓவரை எதிர்கொண்ட பெய்லி 4, 6, 2, 4, 6, 6 என அடித்து நொறுக்கினார். டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் (28) இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2003ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியுடன் ஜோகன்னஸ்பர்கில் நடந்த டெஸ்ட் போட்டியில் ராபின் பீட்டர்சன் வீசிய ஓவரில் லாரா 28 ரன் விளாசி இருந்தார். இந்த சாதனையை பெய்லி நேற்று சமன் செய்தார். இந்த ஓவருடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

Leave a Reply