shadow

லலித மோடியுடன் ப்ரியங்கா காந்தி – வதேராவுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்

priyankaஐ.பி.எல் ஊழலில் சிக்கி இங்கிலாந்து நாட்டில் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படும் லலித்மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவியதாக வெளிவந்த தகவல்கள் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் தலைமறைவு குற்றவாளிக்கு உதவிய இருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் இருவரும் பதவி விலகவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இன்று டுவிட்டரில் லலித்மோடி தெரிவித்துள்ள ஒரு கருத்து காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேராவை தான் லண்டனில் சந்தித்துப் பேசியதாக லலித் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரிடம் என்ன பேசினார்? என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

இதனால் காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கட நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் தான் சமீபத்தில் சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பெயர்களை தொடர்ந்து வெளியிட உள்ளதாக கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply