சென்னையில் உள்ள பெண் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்தி படுகொலை சம்மந்தப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் வைஷாலி என்ற பெண் சாப்ட்வேர் என்ஜினியர், ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்த வேளையில், அவரை நோக்கி வந்த வெங்கடேஷ் என்பவர் திடீரென தான் மறைந்த்து வைத்திருந்த கத்தியை எடுத்து வைஷாலியை சரமாரியாக குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த வைஷாலி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன்பின்னர் வெங்கடேஷும் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு மயங்கி விழுந்தார். தற்பொது அவர் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வைஷாலியை ஒருதலையாக வெங்கடேஷ் காதலித்து வந்ததாகவும், வெங்கடேஷின் காதலை வைஷாலி ஏற்காததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பெருங்குடி காவல்நிலையத்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.