கொரோனாவால் பலியான முதல் இந்தியர்? அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் பலியான முதல் இந்தியர்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் தட்ப வெட்ப நிலைக்கு கொரோனா வைரஸ் பரவாது என்று அனைவரும் கூறியிருந்த நிலையில் தற்போது இந்தியாவில் 40 பேர் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் ஈரானுக்கு சென்றுவிட்டு சமீபத்தில் லடாக் திரும்பிய 76 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவர் தற்போது மரணமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் ஞாயிற்றுக்கிழமை அவர் மரணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் வயது முதிர்வின் காரணமாகத்தான் இறந்ததாகவும் ஒருசிலர் கூறுகின்றனர்.

கொரோனா வைரசால் முதல் இந்தியர் பலியாகி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது இதனை அடுத்து லடாக்கில் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச் 31ம் தேதி வரை மூட லடாக் நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply