shadow

குவைத் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு. விரைவில் தேர்தல் அறிவிப்பு

kuwaitகுவைத் நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினை அதிகரித்து கொண்டு வரும் நிலையில் அந்நாட்டில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் மார்சௌக் அல்-கனேம் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதன் காரணமாக குவைத் இளவரசர் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பின் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக இளவரசர் கூறியதாக குவைத் நாட்டின் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளது. சபாநாயகர் அறிவித்த 24 மணி நேரத்திற்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குவைத் அரசியலமைப்புப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை என்பதால் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply