தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம்! குஷ்புவுக்கு வாய்ப்பா?

தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம்! குஷ்புவுக்கு வாய்ப்பா?

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை மாற்ற காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அனேகமாகா குஷ்பு அல்லது ப.சிதம்பரம் ஆகிய இருவரில் ஒருவர் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பாதாகா கூறப்படுகிறது.

துகுறித்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் நிலைமை குறித்து, சமீபத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துடன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘மாற்று கட்சியில் இருந்து, காங்கிரசுக்கு வந்தவர்களை, மாவட்ட தலைவர்களாக திருநாவுக்கரசர் நியமித்துள்ளார். இது, பாரம்பரிய காங்கிரஸ் கட்சியினருக்கு பிடிக்கவில்லை. ‘அவர்களை, மாவட்ட தலைவர் பதவியில் நியமித்தது தவறு; அவர்களை நீக்குவதுடன்,தமிழக தலைவரையும் மாற்றினால் தான், நிலைமை மாறும்’ என்று, சிதம்பரம் கூறிஉள்ளார். அதற்கு, ராகுல், ‘நீங்களே தலைவராக இருங்கள் என்று கூறியதாகவும், ஆனால் தன்னால் அந்த பொறுப்பை ஏற்க முடியாது என்று ப.சிதம்பரம் கூறியதாகாவும் தெரிகிறது

இந்தா நிலையில் தற்போது, சோனியாவின் சிகிச்சைக்காக,அமெரிக்கா சென்றுள்ள ராகுல், மீண்டும், டில்லி திரும்பியதும், தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து முடிவு செய்வார் என்றும் அனேகமாக குஷ்பு காங்கிரஸ் தலைவராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply