shadow

prabu and kushboo

சின்னத்தம்பி, மை டியர் மார்த்தாண்டன்,வெற்றிவிழா, தர்மத்தின் தலைவன், போன்ற படங்களில் நடித்த பிரபலமான ஜோடி பிரபு-குஷ்பு. இவர்கள் இருவரும் ரகசியம் திருமணம் செய்ததாக கூட 1990களில் செய்தி வெளியானது. இந்நிலையில் குஷ்பு இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்த பின்னர் பிரபுவுடன் ஜோடியாக நடிப்பதை தவிர்த்து வந்தார்.

பின்னர் சினிமா, டிவி, மற்றும் அரசியலில் பிசியான பின்னர் நாளடைவில் இவர்கள் இருவருக்குடனான உறவு முறிந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது இந்த ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. பிரபு நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க குஷ்பு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பிரபுவுடன் மீண்டும் நடிக்க குஷ்புவுக்கு சுந்தர்.சி எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் குஷ்பு கணவரின் எதிர்ப்பை மீறி நடிப்பதாகவும் கோலிவுட்டில் கூறப்படுகிறது. புதுமுக இயக்குனர் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தை தெலுங்குபட நிறுவனம் ஒன்று தயாரிக்கின்றது. இந்த படத்தின் முறையான அறிவிப்பு வரும் மே மாதம் 1ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.

Leave a Reply