கே.எஸ்.அழகிரி

தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக்கொள்ள கே.எஸ்.அழகிரி தயாரா? என பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளதை அடுத்து தயார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் எல்.முருகன் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் எல்.முருகன் அதில் கூறியிருப்பதாவது:

லைவர் முருகன் கேட்டிருக்கின்றார். 20,000 கோடி கொடுத்து காமராஜர் அறக்கட்டளையை முருகன் வாங்குவார் என்று சொன்னால் காங்கிரஸ் கட்சியும் 30 கோடி கொடுத்து கமலாலயத்தை நிச்சயமாக வாங்கும்

இரண்டாவதாக ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முருகன் எவ்வளவு தொகை கொடுத்தும் வாங்க முடியும். காரணம் அவர்களிடம் பிஎம் கேர்ஸ் இருக்கின்றது. எங்களிடம் அதெல்லாம் இல்லை. எங்களிடம் காமராஜர் விட்டுச்சென்ற நேர்மையும் எளிமையும் தான் இருக்கின்றது. அவர் புரிந்து கொள்வார் என்று கருதுகிறேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்

Leave a Reply