சமீபத்தில் சென்னையில் “சிநேகாவின் காதலர்கள்’ என்ற படத்தின் ஆடியோ விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரபல தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான கேயார், இளம் ஹீரோக்கள் அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கின்றார்கள் என்று பேசினார்.

ரயில் டிக்கெட் எப்படி எடுப்பது, ப்ளைட் டிக்கெட் எப்படி எடுப்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஹீரோக்கள் எல்லாம், சம்பளத்தை கூட்டுவது எப்படி என்பதை மட்டும் மிகச்சரியாக தெரிந்து வைத்துள்ளார்கள். நல்ல கதை எது என்றே தெரியாமல் சம்பளம் கொடுத்தால் போதும் உடனே கால்ஷிட் கொடுத்துவிடுகின்றனர்.

பல நடிகைகள் மேக்கப் போட்டால் மட்டுமே அழகாக இருப்பார்கள். ஆனால் சிநேகாவின் காதலர்கள் ஹீரோயின் மேக்கப் இல்லாமலேயே அழகாக இருக்கின்றார்.

ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு வெளியான படங்களில் உண்மையான வெற்றி பெற்ற படம் என்று பார்த்தால், கோலி சோடா மட்டும்தான். மற்ற படங்கள் எல்லாம், வெற்றி பெற்றதாக விளம்பரம் செய்யப்பட்டதே தவிர உண்மையாகவே வெற்றி பெறவில்லை. இதை ஹீரோக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு கேயார் பேசினார்.

கேயார் பேசியதில் இருந்து ஜனவரியில் ரிலீஸான வீரம் மற்றும் ஜில்லா படங்கள் உண்மையில் வர்த்த ரீதியில் வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை என விழாவுக்கு வந்தவர்கள் முணுமுணுப்பதை காண முடிந்தது.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1jmO7gA” standard=”//www.youtube.com/v/XET92ZF3k7s?fs=1″ vars=”ytid=XET92ZF3k7s&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2196″ /]

Leave a Reply