கமல் கட்சியில் இணைந்த திரையுலக பிரபலங்கள்

கமல் கட்சியில் இணைந்த திரையுலக பிரபலங்கள்

நடிகர் கமல்ஹாசன் நேற்று மக்கள் நீதி மய்யம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளில் அவருடைய கட்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இணைந்தனர்.

இந்த நிலையில் கவிஞர் சினேகன், நடிகர் பரணி, நடிகர் வையாபுரி, தயாரிப்பாளர்-நடிகர் ஆர்.கே.சுரேஷ், நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் நாசர் மனைவி கமீலா நாசர் ஆகிய திரையுலக பிரபலங்கள் கமல் கட்சியில் இணைந்தனர்.

இவர்களில் நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் நாசர் மனைவி கமீலா நாசர் ஆகியோர்களுக்கு கமல் கட்சியின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னும் பல திரையுலக பிரபலங்கள் கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply