“இனம்” திரைப்படம் நிறுத்தம். வைகோ, சீமானுக்கு திரையுலகினர் கண்டனம்.

seeman and vaikoஇனம் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சியினர்களுக்கு திரையுலகம் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இனம் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் ரிலீஸ் செய்தது. தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் கேவலமாக இனம் திரைப்படத்தின் சில காட்சிகள் உள்ளதாக வைகோ முதலில் குற்றம் சுமத்தினார். அதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர்களும் இனம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை நீக்குவதாக லிங்குசாமி தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டும் தொடர்ந்து படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது, பல வருடங்கள் தமிழ் சினிமாவில் சிறப்பாக பணியாற்றிய சந்தோஷ் சிவனை மலையாளி என்று கூறி இழிவு படுத்தி வருவது குறித்து திரையுலகினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் இனம் திரைப்படத்தினை ரிலீஸ் செய்தார் என்ற காரணத்திற்காக லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் போராட்டம் நடத்துவது எந்த வகையில் நியாயம் என்றும், அஞ்சான் திரைப்படத்திற்கு ஈழத்தமிழர்களுக்கு என்ன சம்மந்தம் என்றும் திரையுலக பிரமுகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்ப வேண்டும் என்பதற்காகவே வைகோ மலிவான விளம்பரம் பெறும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக சமூக இணையதளங்களில் கருத்து கூறப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் தேர்தலுக்கு பின்னர் வந்திருந்தால் வைகோவிடம் இருந்து எவ்வித எதிர்ப்பும் வந்திருக்காது என்றும் ஃபேஸ்புக்கில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனைக காரணமாக வேறு வழியின்றி லிங்குசாமி இனம் திரைப்படத்தை வேறு வழியின்றி அனைத்து தியேட்டர்களிலும் திரையிடுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இப்படியே போனால் திரையுலகம் அரசியல்வாதிகளின் கையில் சிக்கி சின்னாபின்னாமாகிவிடும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply