இரண்டே தோல்விகள்: புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்துக்கு சரிந்த மும்பை

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோல்வி அடைந்ததன் காரணமாக மும்பை அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது

கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை அணியுடன் மோதிய மும்பை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இதனையடுத்து நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான நடந்த போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இதன் காரணமாக மும்பை அணி தற்போது 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போதைய நிலையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் டெல்லி, இரண்டாவது இடத்தில் சென்னை, மூன்றாவது இடத்தில் பெங்களூரு மற்றும் நான்காவது இடத்தில் கொல்கத்தா அணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது