shadow

கோலமாவு கோகிலா படத்தின் அடுத்த பாடல் வெளியீடு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்றாகிய கோலமாவு கோகிலா படத்தின் பாடல் ஒன்று ஏற்கனவே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இதே படத்தின் இன்னொரு பாடல் வெளியீடு குறித்த தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: `கல்யாண வயசு’ என்று துவங்கும் அந்த பாடலை புதுமுக பாடலாசிரியர் ஒருவர் எழுதியிருப்பதாகவும், அவர் என்பது சர்ப்ரைசாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கண்டுபிடிக்க முடியுமா என்றும் படக்குழுவினர் புதிர் வைத்துள்ளனர். இந்த பாடல் வருகிற 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய் டிவி புகழ் நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. நயன்தாரா , ஜாக்குலின் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply