shadow

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

koditta-idanglai-nirappugaகதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கு பின்னர் பார்த்திபன் இயக்கி வரும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி மற்றும் ரிலீஸ் தேதியை இயக்குனர் பார்த்திபன் அறிவித்துள்ளார். இந்த படத்தின் இசை டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும் இந்த படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளிவரும் என்றும் பார்த்திபன் அறிவித்துள்ளார்.

சாந்தனு பாக்யராஜ், பார்வதி நாயர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி’ மற்றும் ‘பையாஸ்க்கோப் பிலிம் பிரேமர்ஸ்’ தயாரித்துள்ளது. சத்யா இசையமைத்துள்ள இந்த படத்தை அர்ஜுன் ஜனா ஒளிப்பதிவும், சுதர்சன் படத்தொகுப்பும் செய்துள்ளார் மேலும் இந்த படத்திற்கு நடன இயக்குநர் பிரபு தேவா நடன இயக்குனராக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply