ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த கோச்சடையான் திரைப்படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அதிக பொருட்செலவுடன் தயாரான திரைப்படம் கோச்சடையான். இந்தியாவில் மோஷன் கேப்ட்சர் தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் திரைப்படம் இதுதான். ஹாலிவுட்டின் அவதார் இந்த தொழில்நுட்பத்தில்தான் தயாரானது.
இரண்டு வருடங்களாக தயாராகி வந்த இந்த படம் வெளிவரும் தகவல் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று ஈராஸ் நிறுவனம் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, ஷோபனா ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தின் இசை ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.