shadow

kochadaiyaanநேற்று உலகமெங்குm ரிலீஸ் ஆன கோச்சடையான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதால் ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

ரஜினியின் எந்த படமும் சந்திக்காத பிரச்சனையை கோச்சடையான் சந்தித்தது. இது பொம்மை படம் என்றும், ரஜினி படமே இல்லை என்றும், செளந்தர்யா படத்தை சொதப்பிவிடார் என்றும், முதலீடே தேறாது என்றும் ரிலீஸுக்கு முன்பு பலவிதமாக விமர்சனங்கள் எழுந்தது.

இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை அதிக விலைகொடுத்து வாங்குவதற்கு தயங்கினர். முதலில் படரிலிஸுக்கு பின்னர் லோன் பணத்தை பெற்றுக்கொள்வதாக கூறிய தனியார் வங்கி ஒன்று கோச்சடையான் குறித்த நெகட்டிவ் ரிசல்ட் காரணமாக ரூ.40 கோடி லோன் பணத்தை கட்டிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றத்தை அணுகியது.

இந்நிலையில் வேறு வழியின்றி மகளுக்காக ரஜினியே களத்தில் இறங்கினார். கோச்சடையான் படம் தோல்வி அடைந்தால் நஷ்டமாகும் முழுத்தொகைக்கும் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக தியேட்டர் அதிபர்களிடம் அவரே தனிப்பட்ட முறையில் வாக்குறுதி கொடுத்தார். அதன்பின்னர்தான் தியேட்டர் அதிபர்கள் தைரியமாக நேற்று கோச்சடையானை ரிலீஸ் செய்தார்கள்.

kochaஆனால் எல்லோரும் எதிர்பார்த்ததற்கு மாறாக படத்திற்கு பாஸிட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளது. மோஷன் கேப்ட்சரிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தபோதிலும், படம் விறுவிறுப்பாக இருப்பதாக நேற்று ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் கருத்து தெரிவித்ததால், அடுத்து வரும் நாட்களில் ரிசர்வேஷன் செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இன்றும் நாளையும் அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட்டுக்கள் முன்பதிவு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அனைவரும் எதிர்பார்த்ததற்கு மேல் கோச்சடையான் மிக அதிக வசூலை வாரிக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளிலும் கோச்சடையானுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வசூலில் ஒரு புதிய சாதனையை படைக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை சென்னை ஆல்பர்ட் தியேட்டருக்கு  வந்த ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், கோச்சடையான் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1mh7l9d” standard=”//www.youtube.com/v/SAlqeIq9W_E?fs=1″ vars=”ytid=SAlqeIq9W_E&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2072″ /]

Leave a Reply