கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கும் தீபிகா படுகோனே டப்பிங் பேச மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

கோச்சடையான் படத்துக்கான டப்பிங் கால்ஷீட் சென்ற மாதம் கொடுத்திருந்தார் தீபிகா படுகோனே. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் தீபிகாவின் டப்பிங் வேலைகள் நடைபெறவில்லை. தற்போது டப்பிங் பேச இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த், தீபிகாவிடம் பேசிய போது தற்போது பாலிவுட்டில் தான் மிகவும் பிஸியாக இருப்பதாகவும், தன்னால் இப்போதைக்கு டப்பிங் பேச வரமுடியாது என்றும் கூறிவிட்டாராம். ரஜினி படத்தில் நடித்த ஹீரோயின் ஒருவர் டப்பிங் பேச வரமுடியாது என்று கூறியவர் இவர் ஒருவர்தான்.

தீபிகா தற்போது பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கின்றார். இவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ராம்லீலா ஆகிய இரண்டு படங்களும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ரூ.200 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளதால் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் கோச்சடையான் படத்தின் புரமோஷனுக்கும் தன்னால் வரமுடியாது என்றும் இயக்குனரிடம் தெரிவித்துவிட்டாராம் தீபிகா. தீபிகாவின் பதில் குறித்து ரஜினி தரப்பு எவ்வித கவலையும் கொள்ளவில்லையாம். படம் முழுக்க முழுக்க ரஜினி படமாகத்தான் இருக்கும் என்பதால் தீபிகா புரமோஷனுக்கு வராதது குறித்து எவ்வித பாதிப்பும் இல்லையென்று செளந்தர்யா கூறுகிறார்.

Leave a Reply