சென்னையில் இன்று காலை சத்யம் திரையரங்கில் கோச்சடையான் படத்தின் ஆடியோ விழா வெகு சிறப்பாக நடந்தது. இந்த விழாவின் சிறப்பு விருந்தாளியாக ஷாருக்கான் கலந்து கொண்டார். ரஜினிகாந்தின் குரு கே.பாலசந்தர் , ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட முக்கிய வி.ஐ.பிக்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கோச்சடையான் படத்தின் பாடல்களை ஷாருக்கான் வெளியிட கே.பாலசந்தர் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் ரஜினிகாந்த், செளந்தர்யா, கே.எஸ்.ரவிகுமார், ஷாருக்கான் மற்றும் பலர் பேசினார்கள். விழாவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர்.
விழாவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1cGb9Qk” standard=”//www.youtube.com/v/etdOLd5H3dQ?fs=1″ vars=”ytid=etdOLd5H3dQ&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep5330″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.