shadow

அண்ணன் கொலைக்கு வடகொரிய அதிபரே காரணமா? தென்கோரியாவின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் நம் அவர்களின் அண்ணன் சமீபத்தில் மலேசியாவில் உள்ள விமான நிலையத்தில் மர்ம பெண் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக இரண்டு பெண்கள் கைதாகியுள்ள நிலையில் இந்த இரண்டு பெண்களும் வடகொரிய அதிபரின் ஆட்கள் என்றும் அவர் சொல்லித்தான் இருவரும் அவரை கொலை செய்துள்ளனர் என்றும் தென்கொரியா திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய எம்பி ஒருவர் கூறியபோது, ‘வடகொரிய வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் கிம் ஜாங்-நம்’ஐ கொலை செய்ய 2 பெண்களை பணியில் அமர்த்தியிருந்தனர். அதே நேரத்தில் தனது அண்ணனை கொலை செய்ய வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் உத்தரவிட்டார் என தென் கொரிய எம்.பி. கிம் பயுங்-கீ பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் 2 குழுக்கள் அவரை கொலை செய்யவும், ஒரு குழு அவர்களுக்கு உதவவும் நியமிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். ஆனால் இதை வட கொரியா அரசு முற்றிலும் மறுத்துள்ளது

Leave a Reply