மூளைச்சாவு அடைந்த 18 மாத குழந்தை: தானமாக பெறப்பட்ட சிறுநீரகங்கள்

மூளைச்சாவு அடைந்த 18 மாத குழந்தை: தானமாக பெறப்பட்ட சிறுநீரகங்கள்

தமிழ்நாட்டில் முதல் முறையாக மூளைச்சாவு அடைந்த 18 மாத ஆண் குழந்தை இடமிருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்ட தாகவும் அதன் காரணமாக இரண்டு உயிர் காப்பாற்றப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சென்னையில் குழந்தை பிறந்த நிலையில் குழந்தை பிறக்கும் போது எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டது.

இதனை அடுத்து ஜனவரி 5 ஆம் தேதி மூளைச்சாவு அடைந்த அந்த குழந்தையின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக கொடுக்க அவரது பெற்றோர்கள் அனுமதி அளித்தனர்

இதனை அடுத்து 18 மாத குழந்தையிடமிருந்து தானமாக பெற்ற கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் காரணமாக இருவரது உயிர் காப்பாற்றப்பட்டது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.