சிறுநீரில் இரத்தம் இருக்குமாயின் அது புற்றுநோய்க்கான அறிகுறி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தடவையேனும் சிறுநீரில் இரத்தம் தென்படுமாயின் அது சிறுநீரகப் புற்றுநோய்கான ஒரு அறிகுறி என எச்சரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 10 வருடங்களில் சிறுநீரகப் புற்றுநோய் மூன்றில் ஒரு வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2011 ஆண்டு புற்றுநோயினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் ஏழு வீதத்தால் அதிகரித்து 3 ஆயிரத்து 500 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைத்தல் மற்றும் உடற்பருமன் போன்ற காரணங்கள் சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளே சிறுநீரக புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிப்பதாக இங்கிலாந்தின் உடற்சுகாதாரப் பிரிவினர் கூறியுள்ளனர்.

சிறுநீரகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியும் பட்சத்தில், உயிரிழப்பு வீதத்தை குறைக்கலாம் எனவும் சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply