அடுத்து நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்
கேரளாவில் போலீசார் முன்னிலையில் 24 வயது இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலத்திலுள்ள சூரியநெல்லி என்ற பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை மடக்கிய போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். தகுந்த காரணங்களுக்காக அவரை வெளியே வரவில்லை என்பதை விசாரணையில் கண்டுபிடித்த போலீசார் அவரது வாகனத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் திடீரென அருகில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அவர் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது