இந்தியாவில் கொரோனா: ஒருவர் பலி, இன்னொருவர் கவலைக்கிடம்: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக நேற்று பெங்களூரை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் மரணமடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு கொரோனா வைரஸால் இந்தியாவில் முதல் மரணம் ஏற்பட்டது குறித்து பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள 85 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது கவலைக்கிடமாக இருப்பதால் கொரோனா இன்னொரு உயிர் பலி ஆகுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்மணி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பெங்களூரில் நேற்று மரணம் அடைந்த 76 வயது முதியவர் கொரோனாவால்தான் உயிரிழந்தார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே இது குறித்து தெரியவரும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply