shadow

கேரளாவில் கனமழை: ரூ.5 கோடி நிதியுதவி செய்த தமிழகம்

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சுமார் 20க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் ஏராளமானோர் வீடுகளையும் ,பொருட்களையும் இழந்துள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவில் மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் வீரர்கள் முழுவீச்சில் மீட்புப்பணியை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ. 5 கோடி நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்

முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த நிதியுதவி வழங்கப்படும் எனவும், மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கேரள அரசு கேட்டுக்கொண்டால், வெள்ள நிவாரண பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அதற்கான ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply