தேங்காய் உடைப்பதில் உலக சாதனை செய்த கேரள இளைஞர்.

தேங்காய் உடைப்பதில் உலக சாதனை செய்த கேரள இளைஞர்.

ஒரு நிமிடத்தில் 124 தேங்காய்களை ஒரே கையால் உடைத்து உலக சாதனை செய்துள்ளார் கேரளாவைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பூஞ்சார் என்பவர் தேங்காய்களை வெறும் கைகளால் உடைத்து, புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். திருச்சூரில் உள்ள ஷோபா சிட்டி மாலில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த 124 தேங்காய்களை சரியாக ஒரே நிமிடத்தில் ஒரே கையால் உடைத்து சாதனை செய்தார்.

இதற்கு முன்னர் ஜெர்மனியைச் சேர்ந்த முஹமது கஹ்ரிமனோவிக் என்ற நபர், தனது கைகளால் ஒரு நிமிடத்தில் 118 தேங்காய்கள் உடைத்ததே உலக சாதனையாக இருந்து வந்த நிலையில் தற்போது பூஞ்சார் 6 தேங்காய்கள் அதிகம் உடைத்து உலக சாதனை செய்துள்ளார். போக்குவரத்து துறையில் ஊழியராக பணியாற்றி வரும் பூஞ்சாருக்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

https://www.youtube.com/watch?v=8E95cXh3c1A

Leave a Reply

Your email address will not be published.