shadow

குப்பையை அகற்ற நீதிபதி எடுத்த அதிரடி நடவடிக்கையால் கேரள அரசு அதிர்ச்சி

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு பகுதியில் அதிக அளவு குப்பை தேங்கியிருந்தது. இந்த குப்பையை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் பலர் கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளப்படவில்லை.

இதனை அறிந்த நீதிபதி ஒருவர் திடீரென குப்பை குவியலுக்கு அருகில் உட்கார்ந்தார். இதனை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த குப்பைகளை உடனடியாக அகற்றினர்.’

எர்ணாகுளம் மாவட்ட காய்கறி மற்றும் பழச் சந்தையில், ஒரு மாதத்திற்கும் மேல், குப்பை அகற்றப்படவில்லை’ என, எர்ணா குளம் மாவட்ட துணை நீதிபதி, ஏ.எம்.பஷீருக்கு, வியாபாரிகள் புகார் அனுப்பினர்.

இது குறித்து, ஆய்வு நடத்த, நீதிபதி பஷீர், போலீசாருடன் சென்றார். குப்பை குவியலை பார்த்ததும், அருகில் இருந்த கடையில் இருந்து, நாற்காலியை வாங்கி, குப்பை குவியலுக்கு அருகில் போட்டு அமர்ந்தார். குப்பை குவியலுக்கு அருகில், நீதிபதி அமர்ந்திருப்பதை அறிந்து, அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், குப்பையை அகற்றினர்.

Leave a Reply