திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திருவனந்தபுரத்திலுள்ள திரையரங்குகள் வணிக வளாகங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் என அனைத்தையும் மூட கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

மேலும் திருவனந்தபுரத்தில் அத்தியாவசிய பணிகள் தவிர பொது சமூக மற்றும் கலாச்சார கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 10, 12ஆம் வகுப்பு இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது

கேரள அரசின் இந்த அதிரடி உத்தரவால் திருவனந்தபுரம் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.