15கேரள ஆளுனராக முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா திட்சத் இன்று பதவியேற்றார். ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர், பெண்களை இழிவாக பேசியவர் என்றெல்லாம் விமர்சிக்கபட்டு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இன்று அவர் பதவியேற்றுக்கொண்டார்.

கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் ஷீலா தீட்சித்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தற்போது 75 வயது நிரம்பிய ஷீலா தீட்சித் 1998 முதல் 2013-ம் ஆண்டு வரை டெல்லி முதலமைச்சராக இருந்தார்.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததும், ஷீலா திட்சித் மீது ஊழல் வழக்கு பதிவு செய்தது. ஊழல் வழக்கை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் கவர்னராக பதவியேற்றதால் கேரள மக்களும், சமூக ஆர்வலர்களும் பெண்களும் இவருடைய பதவியேற்புக்கு கடும் கண்டனங்களை சமூக இணையதளங்களில் தெரிவித்து வருகின்றனர். டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தின் போது பெண்கள் இரவு நேரத்தில் வருவதால்தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும், பெண்கள் இரவில் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்றும் இவர் கருத்து தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply