கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பிரஜித் பிரேமானந்த்; வயது 20. பேஷன் டிசைனிங் படித்தவர். துபாயில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். துபாயில் டெய்ரா அருகே பிரிஜ் ல் முர்ரார் என்ற பகுதியில் பலமாடிக்குடியிருப்பில் வீடு எடுத்து தங்கினார். அவர் வீட்டில் கேரளாவில் இருந்து சென்ற வேறு சிலரும் தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம், அவர் வீட்டில் தங்கியிருந்த மற்றவர்கள் வெளியே சென்றிருந்தனர். இரவு ஷிப்ட் முடித்து விட்டு வீடு திரும்பிய பிரஜித், தூங்கிக் கொண்டிருந்தார்.  அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயில் அவர் சிக்கினார். தூங்கிக்கொண்டிருந்த அவருக்கு எதுவும் புரியவில்லை.  பால்கனிக்கு வந்து மூன்று முறை வெளியே குதிக்க முயன்றார்.

ஆனால், வெளியே குதிக்க முடியாதபடி ஜன்னல் இருந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அதற்குள் தீ ப்ளாட் முழுவதும் பற்றிக்கொண்டது. தீயணைப்பு படையினர் வந்து வீட்டினுள் போய்ப்பார்த்தபோது, பிரஜித் உடல் கருகி இருந்தது.  இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply