இவர் தமிழகத்தின் முதல்வராக இருந்திருந்தால் அனிதா உயிர் போயிருக்காதோ!

இவர் தமிழகத்தின் முதல்வராக இருந்திருந்தால் அனிதா உயிர் போயிருக்காதோ!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதாவின் உயிர் போயிருக்காது என்று அவருடைய தந்தை கூறியது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தின் முதல்வராக பினராயி விஜயன் இருந்திருந்தால் கூட அனிதாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்பது நேற்று நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள ஒரு மெடிக்கல் கல்லூரியில் கேரள மாணவி ரேவதி என்பவருக்கு நீட் தேர்வு வழியாக மெடிக்கல் படிக்க இடம் கிடைத்தது. கல்லூரியில் சேர நேற்று கடைசி நாள். நேர்முகத் தேர்வுக்கு சென்னை வந்திருந்த ரேவதியிடம் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இல்லை. அடுத்த முறை வருகையில் தகுதிச் சான்றிதழும் சாதிச் சான்றிதழும் சமர்ப்பிப்பதாக ரேவதியின் பெற்றோர் அதிகாரிகளிடம் மன்றாடினர்.

இதனால் செய்வதறியாது திகைத்த ரேவதியின் பெற்றோர் உடனடியாக இதுகுறித்து தனக்கு தெரிந்த ஒருவரின் மூலம் இந்த பிரச்சனையை கேரள முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றனர். உடனடியாக செயல்பட்ட கேரள முதல்வர் சென்னை மெடிக்கல் கல்லூரி நிர்வாகத்தினரிடம் தானே போனில் பேசி இன்னும் இரண்டு நாட்களில் தானே அந்த சான்றிதழ்களை அனுப்பி வைப்பதாக உறுதி கூறினார். முதல்வரே கூறிய பின்னர் பிறகு என்ன? ரேவதிக்கு சீட் கன்பர்ம் ஆகிவிட்டது.

ஒரு மாணவியின் உயிர் போன பின்னரும் அசையாமல் உட்கார்ந்திருக்கும் முதல்வர் இருக்கும் அதே நாட்டில்தான் ஒரு மாணவியின் உயிர் போய்விடக்கூடாது என்பதற்காக தானே உறுதிமொழி அளித்துள்ளார். பேசாமல் இவரை நாம் முதல்வராக தேர்வு செய்தால் என்ன?

 

Leave a Reply