கேரள முதல்வர் அறிவித்த அதிரடி உத்தரவு: மக்கள் மகிழ்ச்சி!

கடந்த சில வாரங்களாக கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்

இதனால் கேரள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களுடன் இயங்கிவரும் நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் 100 சதவீத மாணவர்களுடன் செயல்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.