கொரோனா கட்டுப்பாடுகள்: கேரள அரசு முக்கிய அறிவிப்பு

corona kerala

கொரோனா கட்டுப்பாடுகள்: கேரள அரசு முக்கிய அறிவிப்பு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததால் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கேரளாவிலும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக கேரள அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இருப்பினும் முக கவசம் அணிதல் மற்றும் கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவை மட்டும் தொடர்ந்து அமலில் இருக்குமென்று கேரள அரசு தெரிவித்துள்ளது