அதிர்ச்சித் தகவல்

இந்தியாவிலேயே முதன்முதலாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் நுழைந்தது என்பது தெரிந்ததே ஆனால் கேரள மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து

ஒரு கட்டத்தில் கேரள மாநிலம் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக மாறி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. எங்கே சொதப்பியது என்று தெரியாமல் கேரள சுகாதாரத்து|றை அதிகாரிகள் திணறி வருகின்றனர்

இதனையடுத்து நேற்று ஒரே நாளில் கேரளாவில் 53 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 53 பேரில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதும் 29 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதித்த அனைவரையும் தனிமைப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply