shadow

ஆண்களே இல்லாமல் முழுக்க முழுக்க பெண்கள் மட்டும் வாழும் கிராமம்

shadow

ஆணுக்கு பெண் அடிமை என்றும், பெண்கள் இல்லாமல் ஆண்களே இல்லை என்றும், பெண் தான் உயர்ந்தவர், ஆண் தான் உயர்ந்தவர் என உலகம் முழுவதும் விவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும், ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இந்த உலகில் ஆண் இல்லாமல் பெண்ணும், பெண் இல்லாமல் ஆணும் இல்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் கென்யாவில் உள்ள ஒரு நகரில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே உள்ள ஒரு கிராமம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகரிலிருந்து 380 கி.மீட்டர் தொலைவில் உள்ள சம்புரு என்ற பகுதியில் உமோஜா என்ற கிராம உள்ளது. இந்த கிராமத்தை முழுக்க முழுக்க பெண்களே உருவாக்கினர். இந்த கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தோன்றிய கிராமம் என கூறப்படுகிறது. முதலில் 15 பெண்கள் கூட்டாக இணைந்து 1990-ல் உருவாக்கிய இந்த கிராமத்தில் தற்போது  47 பெண்கள் மற்றும் 200 குழந்தைகள் வசிக்கின்றனர்.

இந்த கிராமத்தின் தலைவியாக ரெபேக்கா லோலோசோலி என்பவர் இருந்து வருகிறார். இவர் பிரிட்டன் ராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டு அனாதை ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமப் பெண்கள் நகை செய்து விற்பதின் மூலமாகவும், இந்தப் பகுதியிலேயே கூடாரங்களால் ஆன ஒரு சிறிய சுற்றுலாத்தலத்தை ஏற்படுத்தியுள்ளதன் மூலமாகவும் இவர்கள் தங்களின் வாழ்க்கை செலவினங்களை எதிர்கொள்கின்றனர்.

பெண்கள் மட்டுமே இருக்கும் கிராமம் என்பதால் அக்கம்பக்கத்து கிராமங்களில் உள்ள ஆண்கள் அவ்வப்போது அத்துமீறி செயல்படுவதுண்டு. எனினும், அனைத்து தடைகளையும் தைரியமாக எதிர்கொண்டு, இந்த 247 பேரும் பத்து குடும்பங்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவருகின்றனர்.

Leave a Reply