shadow

சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்திசுரேஷ்

தமிழ் சினிமாவின் நடிகையர் திலகம் என்று போற்றப்பட்டவரும், காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மனைவியுமான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் மிகவும் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் என்.டி.ஆர் கேரக்டர்களும் உள்ளதாகவும், இந்த கேரக்டர்களுக்கான நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மகாநதி’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படம் பழைய சினிமா உலகை கண் முன்னே கொண்டு வரும் வகையில் பல கோடி மதிப்பிலான அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply