shadow

ராஜமெளலியின் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்

சமீபத்தில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்தில் சூப்பராக நடித்து சாவித்திரியாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் அவரை பாராட்டிய பிரபலங்களில் ஒருவர் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி

இந்த நிலையில் ராஜமெளலியின் அடுத்த படத்தில் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த ஞாயிறு இரவு நடிகர் அல்லு அரவிந்த் கொடுத்த இரவு விருந்து ஒன்றில் ராஜமெளலி மற்றும் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டனர். அப்போது இதுகுறித்து பேசியுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் இப்போது தமிழில் விஜய்யுடன் ஒரு படமும், விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்திலும், விக்ரமுடன் சாமி 2 படத்திலும் நடித்து வருகிறார். எனவே விரைவில் ராஜமெளலி படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply