கவின் நடிக்கும் அடுத்த படத்தில் ‘முல்லை’ நடிகை!

கவின் நடிக்கும் அடுத்த படத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து வரும் காவியா அறிவுமணி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கவின் நடிப்பில் நயன்தாரா தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ஊர்க்குருவி. இந்த படத்தின் நாயகியாக காவியா அறிவுமணி ஒப்பந்தமாகியுள்ளார்

இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கேரக்டரிலும் பாரதிகண்ணம்மா சீரியல் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

கவின் மற்றும் காவியா அறிவுமணி முதல் முதலாக இணைய உள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.