shadow

காஷ்மீரோடு சேர்த்து பீகாரையும் தருகிறோம். எடுத்துக்கொள்ளுங்கள். பாகிஸ்தானுக்கு முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கோரிக்கை

katjuஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை உருவாக்கி வரும் நிலையில் சமீபத்தில் அவர் பீகார் குறித்து செய்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அவர் மீது தேச துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அப்படி என்னதான் பதிவு செய்தார் கட்ஜூ. “பாகிஸ்தானியர்களே நாங்கள் காஷ்மீரை உங்களுக்குக் கொடுக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை நீங்கள் பிகாரையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு கூட்டுச் சலுகை. இரண்டையுமே சேர்த்துத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கிடைக்காது” என்று தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவு பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்ஜுவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார், “கட்ஜு தன்னை பிகாரின் ஆபத்பாந்தவனாக காட்டிக் கொள் றார்” என தனது ஃபேஸ்புக்கில் கூறினார். அதற்கும் கட்ஜு கிண்டலடிக்கும் வகையில், ‘நான் பிகாரிகளின் ஆபத்பாந்தவன் அல்ல. சகுனி மாமா” என பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், அரவிந்த் குமார் என்ற வழக்கறிஞர் கட்ஜு மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தேசத்துரோக (12-ஏ) உட்பட சட்டப்பிரிவுகள் 500, 501, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கட்ஜு, “என் மீது ஐ.நா.வில் புகார் கொடுங்கள்” என இந்த புகாருக்கும் கிண்டல் அடித்துள்ளார்.

Leave a Reply