என் சந்தோசத்தை ஒரே நாளில் கலைச்சிட்டாங்களே

கஸ்தூரி வருத்தம்

நடிகை கஸ்தூரி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறக்க திறக்க வில்லை என்றும் இதனால் தனது கணிப்பு தவறி விட்டதாகவும் இருந்தாலும் தனது கணிப்பு பொய்யானது தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் நேற்று மாலை தமிழக அரசு வரும் 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தது

இந்த அறிவிப்பைப் பார்த்ததும் கஸ்தூரி தற்போது தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாகவது: அவசரபட்டுட்டேனே. என் கணக்கு பொய்ச்சிருச்சுன்னு சந்தோஷ பட்டுட்டேனே. குடிக்கு அடிமையான தமிழக அரசை பற்றி என் கணக்கு சரி. அரசு பண்றது தப்பு. நாடு முழுவதும் இன்று நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது விற்பனையை திறக்க துணிகிறீர்கள்? குடி கொரோனா ரெண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள்

கஸ்தூரியின் இந்த டுவிட்டுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply