பயப்படாம வாங்க, சேர்ந்து சுத்தப்படுத்தலாம்: ரஜினிக்கு கஸ்தூரி அழைப்பு

பயப்படாம வாங்க, சேர்ந்து சுத்தப்படுத்தலாம்: ரஜினிக்கு கஸ்தூரி அழைப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ஒரு சில கருத்துக்கள் ரஜினி ரசிகர்கள் உள்பட பலருக்கும் உடன்பாடு இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் ரஜினியின் நேற்றைய கருத்து குறித்து நடிகை கஸ்தூரி கூறியதாவது:

ரஜினி அவர்களே உங்களை தவிர எங்களால் வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு மேல் தள்ளிப்போடாமல், தயங்காமல் வாங்க. என்னைப்போல் ஏராளமானவர்கள் உங்கள் வருகையை காத்திருக்கின்றார்கள்

இன்றைய பிரஸ்மீட்டில் நீங்கள் பேசியது ஏமாற்றமாக இருக்கிறது. அரசியல் மாற்றம் வரவேண்டும் என்று சொல்லி நீங்கள் முடித்து விட்டீர்கள். இதை சொல்வதற்கு இவ்வளவு பிரத்தியேகமாக எதற்காக ஒரே ஒரு பிரஸ்மீட் என்பது எனக்கு புரியவில்லை

வெற்றி பெற்றாலும் சட்டசபைக்கு போக ஆசை இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். என்னை பொறுத்தவரையில் இது ரொம்ப ஆச்சரியமாக உள்ளது அதிர்ச்சியாக உள்ளது. ஏனெனில் நீங்களே சொல்லியிருக்கிறீர்கள் அதிமுக திமுகவுக்கு விழுந்த ஓட்டுக்கள் ஜெயலலிதா, கருணாநிதிக்கு விழுந்த ஆளுமைக்கான ஓட்டு என்று. அதேபோல் உங்களுடைய ஆளுமைக்குத்தான் ஓட்டு விழும். நீங்கள் கைகாட்டும் ஒருவருக்கு ஓட்டு விழும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்

நீங்கள் இருக்கும்போது இன்னொருவரை கை காட்டுவது என்பது கண்டிப்பாக அரசியல் ஆர்வலர்களுக்கு உங்களுடைய தொண்டர்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே இருக்கும். கட்சி என்று சொன்னாலே தேர்தல் அரசியல் தானே. கட்சி ஆரம்பித்தால் நீங்கள் தான் முதல் ஆளாக களத்தில் நிற்க வேண்டும். நீங்கள் தான் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்

நீங்கள் வாங்க, உங்க பின்னாடி தமிழ்நாடே வரும். சேர்ந்து தமிழ்நாட்டை சுத்தப்படுத்தலாம் என்பதுதான் என்னுடைய வேண்டுகோளாக இருக்கிறது’ என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்

Leave a Reply